Pages

Saturday, 27 September 2014

வியாழன் – வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் நான்காம் நாள் அறிவுச் சுரங்கம்

தொட்டனைத்தூறும் மணற்கேணி - மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு

எல்லா அன்பர்களுக்கும் தில்லைஅகத்தின் இனிய காலை வணக்கம்! என்ன அன்பர்களே நேற்று தமிழ்ச் சோலையில் சுற்றி இளைப்பாறினீர்களா!?  இன்றும் தமிழ் சோலையின் ஒரு பகுதியாகிய அறிவுச் சுரங்கம் பற்றிய பதிவும், அறிமுகங்களும்.

அறிவு என்பது ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை கற்று, தனது அறிவைப் பெருக்கிக் கொள்வதே. பிறந்தவுடன் இருப்பது இயற்கை அறிவு. அதன் பின்னர் நாம் வளரும் போது ஒவ்வொரு கால கட்டத்திலும், வயதிற்கேற்ப, நாம் பெறும் அனுபவத்திலிருந்தும் (பட்டறிவு), கற்கும் கல்வியிலிருந்தும் –ஏட்டறிவும், எழுத்தறிவும்- ஐம்புலன் மூலம் உணர்தலிலிருந்தும் (உணர்வறிவு), ஆழ்மனதில் உறைவதிலிருந்தும், நுண்ணறிவிலிருந்தும், மெய்யறிவிலிருந்தும், தொழில்சார்ந்த  அறிவிலிருந்தும்,துறைச்சார்ந்த அறிவிலிருந்தும்பொது அறிவிலிருந்தும் நாம் பெறுவதுவே. 

மணற் கேணி தோண்டத் தோண்டத்தான் பெருகும், இல்லையென்றால் மூடிக்கொள்ளும். கிணறுகளும், குளங்களும் அவ்வப்பொழுது தோண்டப்பட்டு, தூறப்பட்டால்தான் நீர் நிலைகளாக, பயனளிக்கும் வகையில் இருக்கும். அது போலவே, நாமும் நம் அறிவை வாசித்தல், கேட்டல், ஆராய்தல் மூலம் தோண்டிப் பெருக்கித், தூறெடுக்கவில்லை என்றால், அறிவுப் பெட்டகம் சுருங்கி, சிந்திக்கும் திறனையும் இழந்து, மழுங்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையே! மட்டுமல்ல, நாம் பெற்ற அறிவை, அது ஏட்டறிவாக இருந்தாலும் சரி, அனுபவ அறிவாக இருந்தாலும் சரி, இல்லை ஆராய்ந்து பெற்ற நுண்ணறிவாக இருந்தாலும் சரி அதை நாம் மற்றவர்களுடன் பகிரப் பகிரத்தான் பெருகும். இவ்வுலகில் எல்லோருமே அறிவானவர்கள்தான்.  நாம் நமது அறிவை எந்த முறையில் பெருக்கி, கையாண்டு, ஆளுமைப் படுத்துகின்றோம் என்பதில்தான் வேறுபாடு.

சுருக்கமாக, அறிவு என்பது கல்வி மற்றும் அனுபவத்தால் கிடைக்கும் செயல் திறன் (அல்லது) தகவலறிவு. பார்க்கப் போனால் எல்லா பதிவர்களுமே இவற்றில் அடக்கம்தான்.  இங்கு இடுகை பெரிதாகுமே என்பதால் இலக்கியங்கள், புத்தகங்கள் எழுதுதல், அறிமுகங்கள், போன்றவையாகவும், அனுபவங்கள் மூலம் பெறும் அறிவு என்பதாகவும் பிரித்து அறிமுகங்கள் தொடர்கின்றன. அறிவுக் சுரங்கம் என்பதால் அறிவுக் கருவூலங்களின் அணிவகுப்பு, நூலகங்கள் உட்பட.

இன்று வியாழன். கோள்களில் மிகப் பெரியது வியாழன். ஒரு சொல்லானது இன்னின்ன பொருளைத் தரும் என முதன்முதலில் தோன்றிய திவாகர நிகண்டு, (இந்த நூலுக்குச் சேந்தன் திவாகம் என்னும் பெயரும் உண்டு) வியாழன் என்பதற்குச் சொல்லும் அர்த்தங்கள், குரு, ஆசான், அரசன் என்று.  குரு என்றால் பெரியவன் என்ற அர்த்தமும் உண்டு.  எனவேதான் இன்று மேற் சொன்ன அறிமுக அணிவகுப்பு. உங்கள் எல்லோருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

ஜோதிஜி திருப்பூர்

ஜோதிஜி மிகவும் பிரபலமான, அறிவுமிகுந்த, எல்லோருடைய மதிப்பிற்கும் உரிய  பதிவர்.  இவர் தற்பொது தனது தொழில்சார்ந்த, அனுபவக் கட்டுரைத் தொடராக எழுதி வருகின்றார். தொழில் சாராத அனுபவக் கட்டுரைகளும் உண்டு.  போனால் நிறைய தெரிந்து கொள்ளலாம். புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.  அருமையான புத்தகங்கள்.  டாலர் நகரம், ஈழம்-வந்தார்கள் வென்றார்கள், தமிழர் தேசம் - மின் நூல்
அருமையான தகவல்கள் நிறைந்த சுட்டி இதோ.   தஞ்சை பெரிய கோயில் பற்றிய முதல் சுட்டி, 2 வது. கன்னித் தமிழ் இனி கணினித் தமிழ் என்ற அருமையான ஒரு பதிவு, 3வது அடுத்த தலைமுறைத் தமிழ் என்பதற்கு ஒரு சுட்டி


கரந்தை ஜெயகுமார்

இந்த நல்ல ஆசிரியரின் உழைப்பை என்னவென்று சொல்லுவது?  எத்தனை எத்தனை மாமனிதர்களைப் பற்றிய, நாம் கேட்டிராத மனிதர்கள் பற்றிய அரிய தகவல்களைத் தந்துள்ளார் அழகிய நடையில். தமிழ் விக்கி என்று சொல்லலாம் இவரது தளத்தை. இதோ புதிய ஒரு சுட்டி

மற்றுமொரு சுட்டி
நூற்றாண்டுத் தனிமை

திண்டுக்கல் தனபாலன் செல்லமாக டிடி

வலைச் சித்தரைத் தெரியாதவர் யாரும் உண்டோ?  இவருக்கு அறிமுகம் தேவையே இல்லை!  டெக்னிகல் விஷயம் வேண்டுமா டிடி ய கூப்பிடுங்கப்பா.....திருக்குறள் வேண்டுமா....டிடி தளத்த பாருங்கப்பா....அதுக்கு ஏற்றத் திரைப்படப் பாடல் வேண்டுமா...டிடி ...பல நல்ல தலைப்புகளுக்கு இவரது பதிவுகளை ஆராயலாம்! திருக்குறள் சொல்லியே எல்லா பதிவுகளையும் அழகாக உரைத்த இவரைச் சொல்லாமல் செல்ல முடியுமா...இவருக்கு நாங்கள் சுட்டி தரவில்லை.  தளத்திற்குச் சென்றாலே போதும்.  ஹைடெக் தளம்!  இருந்தாலும் ஒரு சுட்டி எண்ணத்தை மேம்படுத்தும் பாடல்கள்  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்!

மது எஸ்

நாம் எல்லோரும் அறிந்த மிகச் சிறந்த ஒரு பதிவர். அருமையான பல பதிவுகள்.  தற்போது தமிழக சுதந்திர போராட்ட வீர்ர்கள் பற்றிய பதிவுகள்.  இவரது தளத்தில் தொழில் நுட்பம் குறித்தும் அறியலாம்

ஜிஎம்பி

Gmb writes வலைத்தளம்.  மெய்யறிவு.  கீதைப் பதிவுகள் தொடராக எழுதி வருகின்றார். சாக்ரடிஸ் மேற்கோள் சொல்லி கேள்வி கேட்டு, lateral thinking  லேட்டரல் திங்கிங்க் உடையவர். சிறந்த அறிவாளி, கவிதை புனைபவர், நாடகத்தில் நடித்த அனுபவம் உண்டு.  பன்முகத் திறமை படைத்தவர்.


என் கேள்விக்கு என்னபதில் அப்பதிவிற்குச் சுட்டி இதோ.

முனைவர் ரா குணசீலன்
வேர்களைத்தேடி. வலைத்தளம். அதற்கு ஏற்றார் போல் பல அரிய தகவல்களைத் தருகின்றார்.  இதோ ஒரு சுட்டி தைப்பாவைக் காப்பு


திருக்குறளைப் பற்றிய ஒரு அழகான இடுகை

இராயச் செல்லப்பா

செல்லப்பா தமிழ் டயரி வலைத்தளம்.  இவர் கவிஞரும் கூட. புத்தகங்களும் வெளியிட்டுள்ளார்.

ரம்பையும் நாச்சியாரும்" - சா.கந்தசாமி இந்தப் புத்தகத்திற்கானச் சுட்டி

தாகூரின் கையெழுத்தில் கீதாஞ்சலி’ – ஓர் அபூர்வ வெளியீடு

சொக்கன் சுப்பிரமணியன்

பன்முகத் திறமை கொண்ட பதிவர். அவர் வலைத்தளம் சென்றால் அறியலாம்.  அவரது ஒரு ஆய்வுக்கட்டுரைக்கான சுட்டி இதோ.


கடல் கடந்து இருந்தாலும், இவர் தமிழை வளர்க்கும் பணி பாராட்டிற்குரியது. சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா பற்றிய அருமையான தொடர் சுட்டி இதோ.  இது மட்டுமல்ல நாடகங்கள், தன் திரைப்பட அனுபவங்கள் என்று நிறைய உள்ளன வலைத்தளத்தில்


அருள் செல்வப் பேரரசன்

கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட "The Mahabharata" புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு... முழு மஹாபாரதமும் தமிழில்... இணையத்தில்.... தயாரிப்பில் சுட்டி  ஒலி வடிவமாகவும், பிடிஎஃப் கோப்புகளாகவும்.  அருமையான, மகத்தான சாதனை எனலாம்.  விவாதங்களையும் தந்துள்ளார்.

ராஜபாட்டை-ராஜா

என் ராஜபாட்டை வலைத்தளம். சிரிப்பதற்கும் எப்போதாவது சிந்திப்பதற்கும் என்று இவர் சொன்னாலும், ஆன்ட்ராய்ட் போன் தொலைந்து போனால் கண்டுபிடிக்க என்றெல்லாம் தகவல் தருவதால் சிந்திக்க என்று சொல்வதை எடுத்துக் கொண்டு இங்கே சுட்டிகள்
இந்தியா முழுவதும் இலவசமாக பேச ஒரு ANDROID APPLICATION

அல்சர் பற்றிய தகவல்.

இந்தியா முழுவதும் இலவசமாய் பேச் ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்

புதுவை வேலு/யாதவன்

அருமையான இன்று ஒரு தகவல்(தமிழ் தண்டட்டி) பற்றிய சுட்டி இதோ

பொன்.சரவணன் இளமுனைவர் (தமிழ்)

திருத்தம் பொன்.சரவணன் வலைத்தளம்.

அல்குல் என்றால் என்ன அர்த்தம் என்பதற்கான ஆய்வுக் கட்டுரை. தமிழ் இலக்கியங்களிலும் நிறைய ஆய்வுக் கட்டுரைகள் கொடுத்துள்ளார்.  நல்ல ஒரு தமிழ் சுரங்கம்

ஞானசேகரன்

அம்மா அப்பா வலைத்தளம்

ஏன்எதற்குஎப்படி? என்று அழகான விளக்கம் கொடுக்கின்றார்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ?  இன்னும் நிறைய இருக்கின்றன. சுட்டி இதோ

வல்லினம்
கலை இலக்கிய இதழ்
தியானா

பூந்தளிர் வலைத்தளம்.  குழந்தைகளுக்கான பல தகவல்கள் உள்ளன.  இவரைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.  இவர் சில மாதங்களுக்கு முன் வலைச்சர ஆசிரியராக தொகுத்தார்


மழலைப்பிரியன்

அறிவமுது என்று குழந்தைகளுக்கு பல இங்கு உள்ளது


அண்ணா

Insights வலைத்தளம்

இவரது வலைத்தளமே மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது.  அழகாகவும் இருக்கின்றது!  தகவல்களும் நிறைய! ஒரு சுட்டி இதோ
தமிழர்கால அறிவியல்

பாபு நடேசன்

தமிழ் அறிவுக் கதைகள் வலைத்தளம்.  நெய்வேலிக்கார்ர். நண்பர் வெங்கட்ஜிக்குத் தெரிந்திருக்கலாம்.

உதாரணத்திற்கு ஒரு சுட்டி உச்சியைத் தொட செவிடாய் இரு!!!

இணைய நூலகங்கள் அறிவுச் சுரங்கம் தானே!

வாசகர் கூடம்

நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்துவதால் இதற்குத் தனியாகச் சுட்டி தேவை இல்லை. வலைத்தளத்திற்குள் சென்றாலே கிடைத்துவிடும்! இவ்வலைத்தளத்தை நூலக அறிமுகம் எனலாம்

தமிழ் இணைய நூலகம்

குழந்தைகளுக்கானது.  அருமையாக உள்ளது. இவ்விணையத்தில் தமிழ் நூல்களும்,தமிழ்க்கற்கைநெறிப் பாடங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

இது ஆசிரியர்களுக்கு

தமிழ் இணையக் கல்விக் கழகம்

கழகம்தான்.  சந்தேகமே இல்லை

அருமையான இணைய நூலகம்.  கொட்டிக் கிடக்கின்றன அறிவை வளர்க்க.
இலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் கொட்டிக் கிடக்கின்றன. சிறுவர் இலக்கியங்களில் குழந்தைக் கவிஞர் அழ வள்ளியப்பாவின் நூல்களும், டாக்டர் பூவண்ணன் அவர்களின் கதைகளும், காளித்தம்பியின் கதை படிக்க இந்தச் சுட்டி

நாட்டுடைமையாக்கப்பட்ட அறிஞர்களின் நூல்கள் தொகுப்பில் இங்கு வல்லிக் கண்ணன் அவர்களின் நூல்களை இந்தச் சுட்டியில் காணலாம்

சென்னை நூலகம்

எண்ணற்ற நூல்கள் உள்ளன

கல்கியின் ஜமீந்தார் மகன் சுட்டி இதோ

தமிழ் இணைய நூலகம்
— முனைவர் ஐயா. பொள்ளாச்சி நேசன்

இலக்கணம் குறித்தும் அறிந்து கொள்ளலாம்.  பல புத்தகங்கள், தமிழ் சான்றோர் பற்றியும் 

கல்விமணி

ஆசிரியர்களுக்கான தகவல் களஞ்சியம்

வாசிப்புத் திறனை அதிகரிக்க தினமும் 2 மணி நேரம் கூடுதல் வகுப்பு, பள்ளிக் கல்வித் துறை திடீர் அறிவிப்பு - சுட்டி
 
விண்வெளி அறியியல் உண்மைகள்.  சுட்டி

Snippy.. 
இதுவே சுட்டிதான் தமிழ் நாவல்ஸ் என்பதில்
தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.

 
இங்கு இலங்கை நூலகம் முதல் சென்னை நூலகம் வரையிலான வலைத் தளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.


எளிய தமிழில் அதி நவீன மருத்துவ அறிவியல் கட்டுரைகளை உருவாக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த தளம் துணை நிற்கும்

சிம்மன்
CYBERSIMMAN\'S BLOG

இணைய உலகிற்கான உங்கள் சாளரம்
தகவல் தொழில் நுட்பம் அறிய


தமிழ் இணையப் பல்கலைக்கழக மின் நூலகம்

இன்னும் பல கொட்டிக் கிடக்கின்றன.  சில, நாளை தொடரும்.  மற்றவை, பிறிதொரு சமயத்தில். மீண்டும் நாளை சந்திப்போம்!

அன்பர்கள் எல்லோருக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்!