உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். நமது மனத்தை பலவீனமாக்கி, மூடநம்பிக்கையில் ஆழ்த்தி,மந்தமானவர்களாக்கி, சாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புதச் செயல்களை நம்புவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணர, உண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன.
–சுவாமி விவேகானந்தர்
அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்தின் காலை வணக்கம்! வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் இரண்டாம் நாள்! என்ன அன்பர்களே எல்லோரும் நலம்தானே! விவேகானந்தரின் மேற்கோளைக் கண்டதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் இன்றைய தலைப்பு!
இன்று செவ்வாய்! செவ்வாய் என்றவுடன், திருமணத்திற்குத் தடையாக இருக்கும் முக்கிய தோஷம், செவ்வாய் தோஷம் என்று கருதப்படுவதுதான் நினைவுக்கு வருகின்றது! திருமணத்திற்கு, ஒத்த இரு மனங்கள் தானே வேண்டும்?! இப்போது செவ்வாய் கோளிற்கே சென்று குடியேறலாமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் வேளையில், நம்மூர் ரியல் எஸ்டேட் போல், அமெரிக்காவில், தனியார்கள் “செவ்வாய்க்கு ராக்கெட் விடுகின்றோம் அங்கு செட்டிலாக விரும்புவோர் வாருங்கள்” என்று பயணச் சீட்டு பதிவு செய்ய விளம்பரம் கொடுக்கும் வேளையில், இங்கு செவ்வாய்தோஷத்தைப் பற்றிய பேச்சு! திருமணத்திற்கு மனம் ஒத்திருந்தால் பேசாமல் செவ்வாய் கோளுக்கு ஒரு பயணச் சீட்டு பதிவு செய்து குடியேற்றி விடலாமோ?! தோஷம் நீங்கி விடும்! போகிற போக்கைப் பார்த்தால், நாம் இங்கு பூமியின் சுற்றுப் புறச்சூழலை மாசு படுத்தியது போதாது என்று அங்கும் சென்று “செவ்வாய் தோஷமா? “செவ்வாய்க்கே நாங்க தோஷம் கொடுத்துருவோம்ல” என்று புகுந்து பூமியாக மாற்றி விடுவோம் போல! பூமியில் இனி கட்டிடங்கள் கட்ட இடமில்லையாம்!
சமூக விழிப்புணர்வு என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் வேண்டும் என்றாலும், இந்தியராகிய நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக விழிப்புணர்வு இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலும், விஞ்ஞான அடிப்படையிலும் வளர்ந்த மேலை நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன எனும் போது, பல மொழிகள், சாதிகள், மதங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என்று கலந்த ஒரு சமூக அமைப்பு உடைய நம் நாட்டில் சமயம், மதங்கள் சார்ந்த மூட நம்பிக்கைகளும், அறியாமையினாலும், சமூக அக்கறையின்மையினாலும், விழிப்புணர்வு இல்லாமையினாலும் ஏற்படும் மூட நம்பிக்கைள் பெருகித்தான் கிடக்கின்றன!
சமூக விழிப்புணர்வு என்பது மூடநம்பிக்கைகள் சார்ந்தது மட்டுமின்றி, சமுதாய சீர்கேடுகளைக் குறித்துப் பேசி அதை அறிவு பூர்வமாக உணர்ந்து, உள்வாங்கி மாற்றம் எற்படுத்த முனைதலும் தான்! தீண்டாமை, மரங்களையும், காடுகளையும் அழித்து பூமியை பாலைவனமாக்கி சுற்றுப் புறத்தை மாசுபடுத்துதல், நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம், மருத்துவத் துறையிலும், கல்வித்துறையிலும், வியாபாரத் துறையிலும் நடக்கும் தில்லு முல்லுகள், கலப்படங்கள், போலிகள், பலாத்காரங்கள், நம்முடன் வாழும் சக மனிதர்களை இழிவு படுத்துதல் என்று, இன்னும் சொல்லவொணா பல சமுதாயச் சீர்கேடுகள் நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்றன. இதற்காகத்தான், இவற்றில் ஏதேனும் மாற்றம் வராதா, மக்கள் விழிப்புணர்வு பெற மாட்டார்களா என்ற நப்பாசையில், இவற்றையெல்லாம் வலியுறுத்தி பலர் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.(மனிதர்கள் நாம் மேடைப் பேச்சுகளிலும், எழுதுவதிலும் கில்லாடிகள்தான். ஆனால், செயல்களில்?) நாம் சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதும் போது, அறிவியல் அடிப்படையில் சிந்திக்கச் சொல்லி, அறிவியல் என்ன சொல்லுகின்றது என்று எழுதுவது வழக்கம்! ஆனால், அந்த அறிவியல் சார்ந்த மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன! நாங்களும், இது போன்று எழுதுபவர்களில் ஒருவராக எங்களால் இயன்ற வகையில், ஏதோ எழுதியுள்ள சுட்டிகள் இதோ....
மூடநம்பிக்கையால் இழிவு படும் மக்களைக் குறித்த ஒரு இடுகை. அதன் சுட்டி
“பூமித்தாயின் கண்ணீர்” (பல வருடங்களுக்கு முன் கவிதையாக எழுதியது ஆனால் அந்தக் கவிதை தொலைந்து போனதால் கட்டுரையாக....இந்தச் சுட்டியில்
சரி! தில்லைஅகத்தின் சமூக விழிப்புணர்வு பற்றிய அறிமுகங்களைப் பார்ப்போமா! சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் சில ஏற்றுக் கொள்ள கடினமாகக் கூட இருக்கலாம்! ஏனென்றால் நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை! அது எல்லை மீறி சமூகத்தில் புற்று நோயாய் பரவும் போதுதான் விழித்துக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது! அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பது போல நாம் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொள்வோமே! விவாதங்களைத் தவிர்த்து!
நா முத்துநிலவன்
ஐயாவைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது! நல்ல உயர்வானக் கருத்துக்களைச் சொல்லி வருபவர்! அவரும், ஊமைக்கனவுகள் விஜு ஐயா அவர்களும், சகோதரி தேன்மதுரக்ரேஸ் அவர்களும் இடுகைகளில், பின்னூட்டங்களில் உரையாடுவதை நாங்கள் மிகவும் ரசிப்போம், அதில் தமிழ் விளையாடுவதால்! கொஞ்சம் யோசிக்க, கேள்வி கேட்க வைக்கும் ஐயாவின் ஒரு இடுகை இதோ, இங்கு இந்தச் சுட்டியில் “ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்”.
அ பாண்டியன்
அரும்புகள் மலரட்டும் வலைத்தளத்தின் பெயர். என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்” அவரது வாசகம்! உங்கள் அரும்புகள் மலர்ந்து மணம் வீசுகின்றன! என்றும் வீசும் நண்பரே!
மனித நேயம் மிக்க ஆசிரியர். பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். போலி பூசாரிகளும் அதில் ஒரு உதாரணச் சுட்டி இதோ
டி என் முரளிதரன்
மூங்கில் காற்று இவரது வலைத்தளத்தின் பெயர். மிகவும் அருமையான வலைப்பதிவர். தற்போது இவரைக் காணவில்லை! அவரது காணாமல் போனக் கிணறுகள் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசித்துப் பாருங்களேன்! அருமையான பதிவர். சமீபகாலமாக அவரது வலைத்தளத்தில் காணவில்லை! மீண்டும் வருவார் என்று நினைக்கின்றோம்!
உலகளந்த நம்பி
வலைத்தளம் - மூடர் உலகம். மூட நம்பிக்”கைகளை” அடித்து நொறுக்குபவர்! இவரது சில பதிவுகள் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள நல்ல கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே என்ற நன் நோக்குடன்...இதோ இந்தச் சுட்டியைக் கிளிக்கிப் பாருங்களேன்...சுஜாதாவின் அறிவியல் விளக்கங்களுடன்
‘வருமுன் உரைத்தலும் அபூர்வம் நிகழ்த்தலும்’ [ஈ.எஸ்.பி] சாத்தியமா? போட்டு உடைக்கிறார் சுஜாதா!
கில்லர்ஜி
பூவைப் பறிக்க கோடரி எதற்கு என்ற கேள்வியுடன் இவரது வலைத்தளம்
வனமா? பணமா? காட்டமான இந்த அருமையான கட்டுரையை வாசிக்கச் சுட்டி
இந்தச் சுட்டியை கிளிக்கிப் பாருங்களேன்! ஒரு நல்ல, வித்தியாசமான மனித நேயப் பதிவு! .....மனிதர் செம ஸ்பீடு! அவர் எழுத்துக்களிலேயே அது தெரியும்!
நான்கு பெண்கள்
நான்கு பெண்கள். இந்தத் தளத்தில் திருமதி ரஞ்சனி அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை இது. இவர் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளும் தொடர் பதிவுகளாக எழுதிவருகின்றார் அதன் சுட்டி இதோ
உறுப்பு தானம் பற்றிய அவரது அழகான விழிப்புணர்வுக் கட்டுரை
மதி’ஸ் ப்ளாக்
நாங்கள் வலையில் விழிப்புணர்வுக் கட்டுரைகளைப் பற்றித் தேடிக் கொண்டிருந்த போது, “மரங்களை வெட்டுங்கள்” என்ற தலைப்பைப் பார்த்த்தும் ஆச்சரியமாக இருந்தது! மரங்களை நடுங்கள், வளருங்கள், காடுகளை வளருங்கள் என்று சொல்லிவரும் காலகட்டத்தில்...வாசித்த போதுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான கட்டுரை! வயலில் களைகளைப் பிடுங்கித்தானே ஆக வேண்டும் அது போன்று! வாசித்துத்தான் பாருங்களேன்!
புவி
பூவுலகை பூப்போல் காத்திடுவோம்
பூமிப்பந்தையே பூஞ்சோலையாய் மாற்றிடுவோம்
நம் தாய் மடியை (பூமி)
சேதப்படுத்துவதை அடியோடு தவிர்த்திடுவோம்
என்ற அருமையான கருத்துடன், இந்த வலைத்தளம் முழுவதும் புவி காப்பது பற்றிய அருமையான விழிப்புணர்வுக் கட்டுரைகள். பல இன்றியமையாத தகவல்கள்! சுட்டி இதோ
கீதா எம்
தென்றல் வலைத்தளத்தின் பெயர்.
பல விழிப்புணர்வுக் கருத்துக்களை கவிதைகள் வழியாகவே சொல்லி அடிக்கும் இவரது ஒரு உதாரணச் சுட்டி இங்கே!
நிகழ்காலத்தில் சிவா
நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம்) வலைத்தளத்தின் பெயர்.
அவர் எழுதியிருக்கும் விழிப்புணர்வு என்பது என்ன? என்பது பாமரனுக்கும் புரியும் வகையான அருமையான கட்டுரை அதன் சுட்டி இதோ!
யாழ்பாவாணன்
யாழ்பாவாணனின் எழுத்துக்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்
சமூக சீர்கேடுகளை புதுப்பாவினால் அடுக்குபவர். இதோ ஒரு சுட்டி.
ஆயிஷா ஃபரூக்
திருநங்கைகள் பற்றிய மிக அழகான ஒரு விழிப்புணர்வுத் தளம், பெண்களின் பாலியல் கொடுமைகளைப் பற்றியும் பேசுகின்றார் மிக அருமையாக, ஆண்களுக்கு அறிவுரை கிடையாதா என்றும் கேட்கின்றார்!!!
மணவை ஜேம்ஸ்
மனிதனுக்குள் மனிதம் என்ற அழகிய கவிதையின் சுட்டி இதோ
சுந்தர் ராஜன்
மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்களேன்!
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்
இதில் பலர் பங்களிக்கின்றார்கள்
சமூக நலம் காப்போம், கல்வியைக் கற்போம்-கற்பிப்போம், சுகாதாரத்தைப் பேணுவோம் என்று பலர் சேர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்கள். விழிப்புணர்வுக் கட்டுரைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஒரு சில சுட்டிகள் இங்கே..
லஞ்ச ஒழிப்பு பற்றிய சுட்டி அதிரை மெய்சா
போலி உற்பத்தி பற்றிய தொடர் பதிவின் சுட்டி. நபிதாஸ் (மனிதர்களிலேயே போலிகள் இருக்க பொருள் உற்பத்தியில் இல்லாமலா போய்விடும்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது!)
(கொஞ்ச வருஷம் முன்னாடி பச்சைக் கலர் ஜிங்குச்சா நு பச்சைக் கலர் புடவை வாங்கிக் கொடுத்தால் அமோகம் அப்படின்னு வதந்தி பரவி சுத்திச்சுல!)
வதந்தியைப் பரப்பாதீர் என்ற ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக் கட்டுரை. சுட்டி இதோ. வாசித்துத்தான் பாருங்களேன்! அதிரை மெய்சா
புதுகைசீலன்
“இவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது! அன்றும்! இன்றும்! என்றும்!” மிக மிக உண்மையே. எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கட்டுரைகள் வந்தாலும் எந்த மாற்றமும் நிகழவில்லையே! இவரது, எரிபொருள் பற்றிய கருத்து மிக்க கட்டுரையைப் படிக்க இதோ சுட்டி
தமிழ்வாசிபிரகாஷ்
தமிழ் வாசி வலைத்தளத்தின் பெயர். தமிழை நேசிப்பவர்களுக்கு வாசிப்பதற்கு! ஆஹா
வீட்டிற்கு வெளியே சிக்கன் சாப்பிடறவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா சாப்பிடுங்கப்பா...இங்க பாருங்க கலப்படத்தை சிக்கன்ல எலிக்கறியாம்பா. இந்தச் சுட்டில போய் பாருங்கப்பா...
தமிழ்வினை
பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள் மிகவும் விழிப்புணர்வைத் தூண்டும், சமூகத்திற்கு மிகவும் அவசியமான இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வந்ததைத் தமிழ்வினையில் தமிழில் மொழி பெயர்த்து பகிர்ந்துள்ளவர் தமிழானவன் அவர்கள். சுட்டி இதோ
சேவியர்
சாலை : பயணிக்கவா ? மரணிக்கவா ? வாசிக்க வேண்டிய கட்டுரை. இங்கே கிளிக்குங்கள்
மழலைப்பிரியன்
குழந்தைகளுக்கான பக்கம் என்றாலும் நாமும் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் சாலை பாதுகாப்பு குறித்த மிகவும் நேர்த்தியான கட்டுரை. இந்தச் சுட்டியில்
Vathees Varunan
வதீஸ் in கிறுக்கல்கள் வலைத்தலத்தின் பெயர்.
மூடநம்பிக்கைகளைப் பற்றிய ஒரு கட்டுரையின் சுட்டி.
கீற்று
எழுத்தாளர்: தியடோர் பாஸ்கரன்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: சுற்றுச்சூழல்
சுட்டி இதோ
வாசகர் கூடம்
என்னடா சமூக விழிப்புணர்வு அறிமுகப் பகுதியில் வாசகர் கூடம் எப்படி வந்தது என்று எண்ண வேண்டாம்! அதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வன உயிரியலாளரும், திரைப்பட ஆராய்ச்சியாளருமான திரு. தியோடார் பாஸ்கரன் எழுதிய இன்னும் பிறக்காத தலைமுறைக்கு என்ற விழிப்புணர்வுப் புத்தகத்திற்காகத்தான்! அதன் சுட்டி இதோ
பிழை இருப்பின் மன்னிக்க! சுட்டிக்காட்டவும் தயங்க வேண்டாம்!
எல்லா வலை அன்பர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிய நாளாக அமைந்திட எங்கள் நல் வாழ்த்துக்கள்! நாளை மீண்டும் சந்திப்போம்!
அன்புள்ள அய்யா,
ReplyDeleteவணக்கம்.
எனது‘ வலைப்பூவை’ வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தி என்னைப் பெருமைப்படுத்தியதற்காக எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிறைய அன்பர்களை அறிமுகம் செய்துள்ளீர்கள் ... உங்களுக்கு நன்றிகள் பல !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete