Friday, 26 September 2014

தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இனிய, அன்பான வணக்கங்கள்!

எங்கள் அன்பான வலைப்பதிவ நண்பர்கள், தோழிகள், சகோதர, சகோதரிகள், பதிவர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் காலை வணக்கம்!

எங்களை இந்த வாரம் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு அன்பு அழைப்பு விடுத்த திரு. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், திரு. பிரகாஷ்தமிழ்வாசி அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், மனமார்ந்த நன்றிகளும்! நாங்கள் எதிர்பாராத அழைப்பு! மிக்க மகிழ்ச்சி! என்றாலும் முதல் ஆசிரியர் பொறுப்பு என்பதால் சிறிது பொறுப்புடன் கூடிய நடுக்கம்!

நாங்கள் எழுதுவதைப் பற்றிப் பேசிக், கருத்துப் பரிமாறி, ஒருவருக்கொருவர் திருத்தம் செய்து எழுதுவதாலும், குறைவான கால அவகாசத்தாலும், தற்போதைய ஒரு சிறிய இக்கட்டானச் சூழலாலும், இந்தப் பொறுப்பை நாங்கள் செவ்வனே நிறைவேற்ற முடியுமா என்ற ஒரு சிறு குழப்பம். இதுவரை ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரும் தமிழ் அறிஞர்கள்! அவர்கள் எழுதிய விதம் எங்களைப் பிரமிக்க வைத்ததால், நாங்களும், அவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்த ஆசிரியர் பொறுப்பிற்கும் வலைச்சரத்திற்கும் எந்தக் குறையும் ஏற்படாமல், சிறிதேனும் நல்ல விதமாக எழுத வேண்டுமே என்ற எண்ணம்தான்.  இதோ, பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது.  செவ்வனே செய்வோம் என்ற நம்பிக்கையில்.

எங்கள் வலைத்தளம்  http://thillaiakathuchronicles.blogspot.com  (தில்லைஅகத்து - இது ஆங்கிலத்தில் இருப்பதால் பலருக்கும் சிறிது குழப்பம் ஏற்படுவதால் இந்த விளக்கம்)

நாங்கள் இருவர்.  நண்பர்கள் சேர்ந்து எழுதுகின்றோம்.

துளசிதரன் தில்லைஅகத்து :  ஆங்கில ஆசிரியர், CFD Vocational Higher Secondary Schoolபாலக்காடு

கீதா  : சென்னை

எங்களைப் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கில்லை. சொல்வதென்றால், எங்கள் வலைப்பூவில் சொல்லியதுதான், எங்கள் நட்பு 29 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில்S.T. இந்துக் கல்லூரியில், கதை, இலக்கியம், நாடகம், வானொலி படைப்புகள் போன்றவற்றால் வளர்ந்து, பின் காலச்சக்கரத்தின் சுழற்சியில் பட்டு எங்கோ மறைந்தாலும், கடந்த வருடம் துளசிதரனின் thillaiakathu” (தில்லைஅகத்து) எனும் வலைத்தளத்தையும், துளசி ஆங்கிலத்தில் எழுதியிருந்த “மஹாமுடி த க்ரேட்” எனும் புத்தகத்தையும், யூட்யூபில் இருந்த துளசியின் குறும்படங்களையும் கண்ட கீதா, துளசியைத் தொடர்பு கொள்ள, நட்பு மீண்டும் அன்றலர்ந்த மலர் போல மலர்ந்தது! கீதா, துளசியின் புத்தகமான “HOW TO ANALYSE A VISUALIZED DRAMA AND ACHIEVE ENGLISH PROFICIENCY”க்கு விமர்சனம் எழுத, (இது துளசியின் கூகுள் + ல் உள்ளது) எங்கள் உள்ளிருக்கும் தமிழ் பற்றாலும், எழுத்தார்வத்தாலும் கடந்த வருடம்http://thillaiakathuchronicles.blogspot.com   எனும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.

ஆம்! 1711 ல் இங்கிலாந்தில், ஜோசஃப் ஆடிசனும், (JOSEPH ADDISON) சர் ரிச்சார்ட்ஸ்டீலும் (SIR RICHARD STEELE)  சேர்ந்து “ஸ்பெக்டேடர்” (SPECTATOR) எனும் தினசரி இதழ் ஆரம்பித்து எழுதியது போல்! இந்த அகத்தில், நாங்கள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவைபாதித்தவைவலி தந்தவைமகிழ்வு தந்தவைஆச்சரியப்பட வைத்தவை,அதிசயப் பட வைத்தவைஅமைதி தந்தவைபற்றிய எங்கள் அனுபவங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் எங்கள் சிற்றறிவிற்கு எட்டிய வரை எழுதி வருகின்றோம். இந்த வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் மாதங்களே ஆன நிலையில் எண்ணற்ற நட்புகளை எங்களுக்கு வழங்கியுள்ளது! தற்போது இரு வலைத்தளங்கள் எங்கள் இருவரின் கீழ்! எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, எங்களைப் பற்றிச் சொல்வதை விட நாங்கள் கண்ட வலைத்தளங்களை இங்கு சொல்லலாமே!  எல்லோரது வலைத்தளங்களும் இனிய தமிழும், உயர்ந்தக் கருத்துக்களும் உள்ளடக்கிய தேனருவியே!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல் இவ்வுலகமே கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  ஆம்! “அன்பே சிவம்” (LOVE IS GOD) என்ற அடிப்படைத் தத்துவத்தில் தான் இந்த உலகம் இயங்குகின்றது.  அன்பாகிய சிவம் ஒவ்வொருவருடைய இதயத்து உள்ளிலும் உள்ளது. இறைவனை அடைய நம் உள் கடக்க வேண்டும் என்றக் கருத்தை மையமாகக் கொண்டு நாங்கள் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ. வாசித்துப் பாருங்களேன்!


இறையுணர்வு அதிகம் உண்டு. ஆயின், எங்களுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.  எனவே, அந்த இறைவனின் பொற்பாதம் வணங்கி எங்கள் பொறுப்பு இனிதாக, நன்றாக அமைய, அன்பர்கள் உங்கள் எல்லோரது வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டி, இந்த வார ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகின்றோம்!

சமயமும், இலக்கியங்களும் இரண்டறக் கலந்தவை! எனவே, ஆன்மீகம், இறைவன், கோயில்கள் பற்றி உன்னதமாக எழுதும் வலைப் பதிவர்களின் அறிமுகத்துடன் எங்கள் ஆசிரியப் பொறுப்பு தொடங்குகின்றது! 

இவர்கள் ஆன்மீகப் பதிவர்கள் என்று மட்டும் கொள்ள முடியாது.  எல்லோரது வலைத்தளங்களும் தமிழில் கொஞ்சி விளையாடுகின்றன. தமிழ் பாடத் திட்டத்தில், நாம் கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாசுரங்களும், பெரியபுராணமும், குற்றாலக் குறவஞ்சியும், சீறா புராணமும், வீரமாமுனிவரின் திருக்காவல் ஊர்க் கலம்பகமும், தேம்பாவணியும் படிக்கவில்லையா? அது போன்று, நம்பிக்கை இலாதாரும் கூட, இந்தத் தமிழ் சுவைக்காக இவற்றை வாசித்து இன்புறலாம் என்ற நல்ல எண்ணம்தான்!  ஆன்மீகப் பதிவர்கள் ஒரு சிலரை அறிந்தாலும் கூகுளில் தேடிய போது எத்தனை வலைத்தளங்கள்! அருமையான பதிவுகள்! நிறைய தகவல்கள்! எல்லா வலைத்தளங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை, தற்போது கால அவகாசக் குறைவினால்!  எனவே அவற்றை எங்கள் சிற்றறிவிற்கு எட்டியவரை இங்கு கொடுத்துள்ளோம்! இனியேனும் அந்த வலைத்தளங்களை நாங்களும் வாசிக்க வேண்டும்! 

இராஜராஜேஸ்வரி

மணிராஜ் என்பது வலைத்தளத்தின் பெயர்

ஒவ்வொரு கோயிலைப் பற்றியும்பண்டிகைகள் பற்றியும்திருவிழாக்கள் பற்றியும்,பல அரிய தகவல்களை அள்ளித் தெளிப்பவர் இந்தச் சகோதரி.  ஆன்மீக வலை உலகில் மிகவும் பிரபலமானவர்.  நாங்கள் இருவருமே நாகர்கோவில் பந்தம் உடையவர்கள் என்பதால், சுசீந்திரம் தாணுமாலயன் பற்றிய அவரது பதிவிற்கானச் சுட்டியை இங்கு கொடுத்துள்ளோம்.  இது ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதமே!

---------------------------------------------------------------------------------------------------------------------
துரை செல்வராஜு

தஞ்சையம்பதி என்பது இவரது வலைத்தளத்தின் பெயர்

நாம் எல்லோருமே திருவிளையாடல் திரைப்படத்தைப் பார்த்திருப்போம்.  ஆயின் அந்தத் திருவிளையாடலைமனதிற்கினியசுவையான தமிழில்பாடல்களுடனும்,கதைகளுடனும்திருவிளையாடல் காணீரோ என்று அந்த ஆலவாயனின் விளையாடலை எழுதியிருப்பதை இந்தச் சுட்டியில் வாசித்துக் களியுங்களேன்!

------------------------------------------------------------------------------------------------------------------
கீதா சாம்பசிவம்

எண்ணங்கள் வலைத்தளத்தின்  பெயர்.



 எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! என்று இவர் சொல்லியிருந்தாலும் அப்படித் தெரியவில்லை!! மிக அழகான நடை. நாம் இறக்கும் போது நாம் சம்பாதிக்கும் பணம் வரப் போவதில்லை! மறு உலகம் செல்வதற்கு அந்த இறைவனின் நாமம் மட்டுமே விசா! பாஸ்போர்ட்! என்று சொல்பவர்! மிகச் சரியான வார்த்தைகள், ரசிக்க வைத்தன!

      ஆன்மீகப் பயணம் பற்றி இந்தத் தளத்தில் எழுதுகின்றார். நீங்களும் அவருடன் சென்று வாருங்களேன்!  நாங்கல் சென்று வந்ததால் இந்தப் பரிந்துரைச் சுட்டி!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணபிரான், ரவிஷங்கர் (KRS)

“ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன. அதிகம் பேசாதுகேள்விகள் ஏதும் கேட்காதுதனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!  அடியார்களுடன் அடியார்களாகக்கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும்,பாடுவதும்கேள்வி கேட்பதும்விடை தேடுவதும் ஒன்று!” 

அழகான விளக்கம்!

சமயம் சார்ந்தது அல்ல! தமிழ் சார்ந்தது!! என்று சொல்பவர் அதை நிலை நிறுத்தும் வண்ணம் வியக்கும் விதத்தில் – பார்ப்பதற்கு மிகச் சிறியவர் போல இருக்கின்றார்.  ஆனால் எழுத்தோ முதிய அனுபவம் உள்ளது போன்ற ஆழ்ந்த கருத்துக்களுடன் - பேச்சுவழக்கிலும், நல்ல இலக்கியத் தரத்திலும் ஆன்மீகம் பேசுகின்றார்!  தொல்காப்பிய உதாரணங்களுடன்! சுட்டி இதோ


நாங்கள் எங்கள் இடுகையில் சொல்லியிருந்தது போலவேஇவர் அவரது நடையில்,

“Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!

 என்று இவர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பதும், எங்களைக் கவர்ந்தது.  சமீப காலத்தில் இவரது இடுகைகள் இல்லை.  ஏனோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------      -------      கபீரன்பன்

கபீரின் கனி மொழிகள் என்ற பெயரில் வலைத்தளம்

கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சியாகத் தனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவரது வலைத்தளம்.  நாங்கள் எங்கள் இடுகையில் சொன்னதை இன்னும் சுவைபட அழகாகத் திருமூலரின் பாடல்களோடு சொல்லுகிறார்

ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள  இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும்.” என்று மிக ஆழமானத்  தத்துவத்தைச் சொல்லுகின்றார் கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே என்ற இடுகையில்.  அதன் சுட்டி

-----------------------------------------------------------------------------------------------------------------------
பாலா

சித்தர்களின் முழக்கம்...வலைத்தளத்தின் பெயர்

“ஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்...என்று தன்னைச் சொல்லி எழுதும் இவர், சித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் என்றும், அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாகக் கூறப்படுகிறது”. என்று சொல்லி, இலக்கியமும் இறையுணர்வையும் கலந்து கட்டி அடிக்கின்றார்.  அதற்கு ஒரு சிறு உதாரணச் சுட்டி

நெஞ்சறி விளக்கம் - இறைவன் உறையும் இடம்
---------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா வெங்கட்ராமன் 

வலைத்தளத்தின் பெயர் என் வாசகம்

யாரிந்த நடராஜன் என்ற அருமையான இடுகையின் சுட்டி

இவர் எழுதும் இடுகைகளில் ஆன்மீகமும், இலக்கியமும் இணைந்து, பெரும்பாலும் கர்நாடக இசைப் பாடலுடனும் பதிவிடப்படுவது இயலும் இசையுமாக ஒரு ஆன்மீகப் பயண இன்பத்தைத் தருகின்றது.  வள்ளலார் பற்றிய இந்தச் சுட்டியைப் பாருங்கள் உங்களுக்குப் புரியும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
kaumarap payanam

“இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்!”
ஆம்! உண்மையே! சென்று பாருங்கள்!


ஆன்மீகம் என்றால் என்னஎன்பதன் இவரது விளக்கம் பாருங்கள் இந்தச் சுட்டியில்.  இவரும் சித்தரின் ஜீவ நாடி ரகசியம் என்று பிரமாதப் படுத்துகின்றார்.  சுட்டி இதோ,


ஆனந்தத் தாண்டவம் பற்றி இங்கே சொல்லியுள்ளார் பாருங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------------
ஞானவெட்டியான்

ஆலயங்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்


பல ஊர்கள் வாரியாக கோயில்கள் பற்றிச் சொல்லி இருக்கின்றார்.  நட்சத்திர ஆலயங்கள் என்ற ஒரு பதிவு. ஆனால், அதன் சுட்டி எங்களுக்குச் சரியாகக் கிடைக்கவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசுதேவன் திருமூர்த்தி

கடவுள் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்லும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்களேன்!
அடுத்த தலைமுறையினருக்காகவும் அவரது ஆன்மீக வலைப்பூhttp://aanmikamforyouth.blogspot.in/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முருகானந்தம் சுப்ரமணியன்


கோயில்கள், கடவுளர்கள், திருவிழாக்கள் பற்றி மட்டுமல்ல இவரது வலைத்தளம், கைலாய யாத்திரை செல்வது பற்றியும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
The grand Velu janaka.

சித்தர் உலகம்  - சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலைத்தளம்

இன்னும் பல வலைத்தளங்கள் உள்ளன. இங்கு நாங்கள் ஒரு சிலவற்றையே குறிப்பிட்டுள்ளோம். பதிவு பெரிதாகி விடுமோ என்ற காரணத்தினால். பிறிதொரு சமயமும் வாய்ப்பும் கிடைத்தால் பகிர்கின்றோம்.

இன்று திங்கள். “திங்க்” “அள்” இறைவனை “திங்க்” செய்து “அள்”ளுங்கள் அவனது அருளை!

எல்லா அன்பர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.  மீண்டும் நாளை சந்திப்போம்.

2 comments:

  1. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  2. ஆகா நிறைய வலைதளத்தை அறிமுக படுத்தியுள்ளீர்கள் நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete