தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
உயிருக்கு நேர்!
- -கவிஞர் பாரதிதாசன்
என்ற பாரதிதாசனின் கவிதை வரிகளுக்கு உருவம் கொடுப்பது போல் வலை உலகில், தேன்மதுரத் தமிழோசை உலகெங்கும் கேட்கட்டும் என்று தமிழை வளர்த்து அதனை உலகெங்கும் ஒலிக்க வைக்கும் நம் அன்பர்களின் வலைத்தளங்களைக் கொண்டுத் தில்லைஅகம் உருவாக்கும் தமிழ்ச் சோலை!
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே சுகம் பல தரும் தமிழ்ப் பாசுவையொடு கவிதைகள் தா தமிழே நாளும் நீ பாடு! தமிழிசையே தனியிசையே தரணியிலே முதலிசையே ஊன் மெழுகாய் உருகும் கரையும் அதில் உலகம் மறந்து போகும்!
– கவிஞர் புலமைப் பித்தனின் அழகிய வரிகள். ராஜாவின் இசையில்! ஆஹா! என்ன ஒரு மனதைக் கொள்ளை கொள்ளும் இசையும், வரிகளும்!
கவிஞரின் வரிகள் இந்தத் தமிழ்ச்சோலைக்கு மிகவும் பொருந்தும்! மரபும், புதுமையும் கலந்த கவிதைகளும், சங்க இலக்கியங்களும், நவீன இலக்கியங்களும், பாக்களும், இலக்கணங்களும், கட்டுரைகளும், தமிழ் கடல்களாக, மனதைத் தொட்டுச் செல்லும் அலைகளாக, மனதை நிறைக்கும் அருவிகளாக, நதிகளாக, காட்டாறுகளாக, அழகிய குறுஞ்செடிகளாக, வேரூன்றிய மரங்களாக, கண்ணையும், மனதையும் பல நிறங்களில் கொள்ளை கொள்ளும் நறுமணப் பூக்களாக, அறிவுக்கும், மனதிற்கும் ஊட்டம் அளிக்கும் மூலிகைகளாகப் பரந்து, குவிந்து கிடக்கும் இந்தத் தமிழ் சோலையில், நாம் அழகிய தமிழில் நனைந்து, மூழ்கிக் குளித்து, களித்து, இன்பம் அடைந்து, முகர்ந்து, நுகர்ந்து, பருகி, இளைப்பாறுவோம்! இந்தத் தமிழ் சோலையில் காதல் கவிதைகளும் கொட்டிக் கிடப்பதால் “தமிழ் எங்கள் இளமைக்குப் பால்” ஆஆஆஆஆ என்று கூத்தாடிக் களிக்கலாம்! சோலைகளின், ஆல மரங்களுக்கும், மரபுச் செடிகளுக்கும் இடையில் குரோட்டன்சும் உண்டு! மனதை உலுக்கும் கவிதைகளையும் காணலாம்! அவர்களுக்கு நாம் ஆறுதல் சொல்வோம்! இவர்கள் தங்களது படைப்பாபரணத்தால் தமிழ் தாயை அலங்கரிக்க, தாயவள் ஒயிலாய் நடக்கின்றாள் இந்தச் சோலையில்! தாயுடன் நடந்து நாமும் நுகர்ந்து, சுவைப்போமா? வாருங்கள் எங்களுடன் தமிழ்ச்சோலைக்கு! இந்தச் சோலை எங்களை பிரமிக்க வைத்தது போன்று உங்களையும் பிரமிக்க வைக்கும் என்பது உறுதி!
(தேவநேயப் பாவாணர் மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி,சிறப்பாக மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் என்று அழைக்கப்பட்டார்! நன்றி விக்கி!)
எனவே இன்று தில்லைஅகத்தின் தமிழ்ச்சோலையில் வலையில் உள்ள தமிழ் விற்பன்னர்களின் அணிவகுப்பு!
இந்த அணிவகுப்பு விற்பன்னர்களுக்கும், மொழிப்புலமைக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
புலவர் ராமானுசம்
புலவர் கவிதைகள் இவரது வலைத்தளத்தின் பெயர்! மூத்த வலைப்பதிவர்! அருமையான கவிதைகள் படைத்து மகிழ்விப்பவர்! எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
உழவுத் தொழிலைப் பற்றிய அழகுக் கவிதையை வாசித்திட இங்கே சொடுக்குங்கள். (க்ளிக்குங்கள் என்று எழுதினோம். இங்குள்ள தமிழ் விற்பன்னர்கள் எங்களை அடித்துவிடுவார்கள்!!)
அவரது ஆதங்கத்தைப் பாருங்கள் இந்தச் சுட்டியில்! ஐயா! தாங்கள் முதுமை அடையவில்லை! அது தங்கள் உடலுக்கே! அறிவிற்கு அல்ல! எனவே இன்னும் பல கவிதைகள் தாங்கள் படைக்க வேண்டும்! தங்கள் உடல் நலம் ஒத்துழைக்கும் நேரத்தில்! அதுவே எங்கள் எல்லோரது அவா!
கவிஞர் கி பாரதிதாசன்
தலைவா். கம்பன் கழகம் பிரான்சு
கவிஞர் கி பாரதிதாசன் கவிதைகள் – வலைத்தளம்.
பாரதிதாசன் என்ற பெயர் என்பதால் அற்புதக் கவி பாடும் திறமையா? இல்லை அவர் பெற்றோர், இவர் பிற்காலத்தில் இப்படிப் புகழுடன் விளங்குவார் என்று இந்தப் பெயர் வைத்தனரோ!
கம்பன் புகழ் வாழ்க! கன்னித் தமிழ் வாழ்க! என்று சொல்லும் இவர், நாங்கள் மேற் சொன்ன வரிகளுக்குகிணங்க அவரது படைப்பாகிய இந்த “உயா்தமிழ் காப்பாய் உடன்!” என்ற கவிதையைப் பாருங்கள்! தமிழ் நங்கை நர்த்தனம் ஆடுகிறாள் இவரது தமிழைக் கண்டு! சுட்டி இதோ! சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!
ஊமைக்கனவுகள்
யானா நடாத்துகின்றேன் என்று எனக்கே நகை தருமால்
விஜு ஜோசஃப் இவர் பெயர். இவரது படைப்புகளைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை! அதைப் பற்றிச் சொல்ல எங்களுக்கு அருகதை உள்ளதா என்றும் தெரியவில்லை! இவரது பிரமிக்க வைக்கும் படைப்பு! இதோ அந்தச் சுட்டி! இது
கவிதைக்கு!
இதோ இலக்கண ஆய்வுக்கு ஒரு சுட்டி
ரூபிகா
அம்பாள் அடியாள் வலைத்தளம்
தமிழ் கவிதைகள் அருவியாய் கொட்டுகின்றன! ஆன்மீகமும், தாயகம் பிரிந்த சோகமும், காதலும் இழையோட...
விநாயகர் வெண்பா
இனியா
காவியக்கவி
அவரது பெயருக்கும், வலைத்தளப் பெயருக்கும் ஏற்றார் போல் இனிய காவியக் கவி படைப்பவர்...சொட்ட சொட்ட நனையலாம்!
அருணா செல்வம்
கதம்ப வலை
பிரபலமானவர். எல்லா தளங்களிலும் கலக்குபவர். கவிதைக்கு இதோ ஒரு சுட்டி
இலக்கியத்திற்கு இதோ ஒரு சுட்டி
ரமணி எஸ்
தீதும் நன்றும் பிறர் தர வாரா வலைத்தளம் பல விருதுகளை அலங்கரித்துக் கொண்டு வெற்றி நடை போடுகின்றது!!
அதன் காரணகர்த்தா படைக்கும் கவிதைகள் பல தளங்கள் காண்பவை! இதோ இங்கே ஜாலிக்காக அவரது கவிதைக்கானச் சுட்டி
ஆதங்கத்துக்கான ஒரு கவிதைச் சுட்டி
கவியாழி கண்ணதாசன்
கவியாழி வலைத்தளத்தின் பெயர். ஆழிதான்! கவிதைகளில்! இதோ சுட்டி ஒன்று
மனிதம் போற்றி வாழ்வோம்
தேன்மதுரக்ரேஸ்
தேன்மதுரத் தமிழ் வலைத்தளம். தேன், மதுரம் என்று தன் பெயரிலும், வலைத்தளத்திலும் – இரண்டுமே இனிப்பவை – சொல்லுவது போல் இவரது தமிழ் சுவை அபாரம்! சங்க இலக்கியங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து கட்டி அடிக்கின்றார்! அம்மாடியோவ்! குறும்பாவிற்கான ஒரு சுட்டி இதோ!
இலக்கியத்திற்கு இதோ
அரசன்
கரைசேரா அலைகள். அரசனேதான்! தமிழில் ஆட்சி புரிபவர்!
இதோ இந்த மனதைத் தொடும் "செருப்பறுந்த கதை”யை இந்தக் கவிதையில் வாசியுங்கள்! அந்த அறுந்த செருப்பு எதைச் சொல்லுகின்றது என்று பாருங்கள்! சுட்டி இதோ!
சிணுங்கல்களின் சத்தத்தை இங்கு கேளுங்களேன்!
மாயவரத்தான் எம்.ஜி.ஆர்.
கவிதைக் கிறுக்கன். உண்மையே! அவரது வலைத்தளத்தைச் சொடுக்கினாலே உங்களுக்கு கவி விருந்து கிடைக்கும்! தேடல், உரிமை, அப்பாவின் அம்மா..,திருநங்கைய(யா)ர் என்று இன்னும் பல!
சீராளன்
என்னுயிரே வலைத்தளம்
காதல் கவி புனைந்து அதுவும் தொடர் வண்டியாய் எல்லோரையும் உணர்வுகளிலும், மொழியிலும் நனைய வைக்கின்றார். இதோ சுட்டிகள்
வாழ்வில் கண்ட பாடங்கள்
தளிர் சுரேஷ்
தளிர்! எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும்!
சென்ரியு, ஹைக்கூ, லிமெரக்கூ கவிதகளில் அதகளம் புரிபவர்! தமிழ் இலக்கணமும் கற்பிக்கின்றார், இலக்கிய உதாரணங்களுடன்.
சென்ரியு
ஹைக்கூ
ரூபன்
ரூபனின் எழுத்துப் படைப்பு.
இவரைத் தெரியாதவர் யாரேனும் உளரோ?இங்கு? நிச்சயமாக இருக்க முடியாது! போட்டிகளும் நடத்துபவர்! அவரது கவிதைக்கு ஒரு சுட்டி
இதயத்தில் உன்னைச் சிறை வைப்பேன் என்று எல்லோரையும் சிறை வைத்துள்ளார்!
இளையநிலா
இந்தச் சுட்டியைச் சொடுக்குங்கள் உறுப்பு தானம் உயர் தானம் என்று இயம்பும் அழகிய கவிதை. இன்னும் பல கவிதைகள் இந்தச் சுட்டியில். இவரது ஆசிரியர் கவிஞர் கி பாரதிதாசன்
http://ilayanila16.blogspot.in/search?updated-max=2014-07-23T15:19:00%2B02:00&max-results=3&start=3&by-date=false
மைதிலி கஸ்தூரிரங்கன்
மகிழ்நிறை வலைத்தளத்தின் பெயர். விஜு ஐயாவின் மரபிக் கவிதையை புது வடிவில் எழுதுபவர். இவர் பல தளத்திலும் அதகளம் புரிபவர். இவரது குறூம்பா சுட்டி இதோ. ஆங்கிலத்திலும் கவிதை எழுதுபவர்! மொத்தத்தில் அறிவிற்கரசி!
கீதமஞ்சரி
என் மூச்சும் பேச்சும் என்றென்றும் தமிழமுதே!
என் எழுதுகோல் பீச்சும் எண்ணத்தின் வீச்சுமதுவே என்று தமிழில் களை கட்டுகின்றார் பல தளங்களில். இவரை உங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்! பிரபலமானவர்! எங்களுக்கு முன் வலைச்சரத்தை ஆண்டவர்! மூன்றாம் முறையாக.
கவிதைக்கும், இலக்கியத்திற்கும் இதோ
அன்பு ஜெயா
தமிழ் பந்தல் வலைத்தலத்தின் பெயர்! மிகச் சரியே! தமிழ் சங்க இலக்கியத்தால் பந்தல் போடுகின்றார் அருமையாக! கம்பனின் உவமைகளையும் ஆராய்கின்றார்.
சங்க இலக்கியத் தூறலுக்கு ஒரு சுட்டி இதோ சங்க காலத் தமிழர்களின் வளம் பற்றிய ஒரு கட்டுரை
ஆர். உமையாள் காயத்ரி
எளிமையான யதார்த்தம்...நாங்க சொல்லவில்லை...அவரது வலைத்தளம்!
தாயின் முகம் – கவிதை தாயைப் பார்க்க சொந்த ஊருக்குப் போகும் முன் கவிதையில் வடித்துவிட்டுச் சென்றிருக்கின்றார். வந்ததும் பாசக் கவிதையை எதிர்பார்க்கலாம்!
சிவகுமாரன்
விற்பனைக்கு எனும் அவரது கவிதையின் சுட்டி. இதோ! மனதை உலுக்குகின்றது.
மகேந்திரன்
வசந்த மண்டபம் வலைத்தளத்தின் பெயர். நாட்டுப் புறப் பாடல்களை அருமையாகச் சொல்கின்றார். எம் மொழியாம் தமிழ்மொழிக்கு ஒரு சிறு தொண்டாற்றத் துடிக்கும் தமிழகத்தின் தென் கோடியில் இருக்கும் ஒரு சிறு இதயம் என்று சொல்பவர். சுட்டி
வெற்றிவேல்
இவர் இரவில்தான் புன்னகைக்கின்றார்!!
இலக்கியம் பேசுகின்றார், கவிதையால் மனதைத் தொடுகின்றார். சரித்திர புதினமும் தொடராய் எழுதுகின்றார்! இத்தனைக்கும் சின்னப் பையன்! படைப்பிலோ இந்தச் சோலையில் எல்லோருக்கும் நிகரானவர்! பிரமிக்கின்றோம்!
கலித்தொகைக்கு ஒரு சுட்டி
அவரது புதினத் தொடருக்கு ஒரு சுட்டி
கவிதைக்கு ஒரு சுட்டி....யம்மாடியோவ்!
துளசி ஸ்ரீனிவாஸ்
மயிலிறகால் வருடுகின்றார்! அவரது கவிதை நயத்திற்கு ஒரு சுட்டி இதோ! மனதில் ஏன் சோகம் வந்தது? என்று கேட்கின்றார் விடையும் அவரே பகர்கின்றார்!
http://mayilirahu.blogspot.com/2014/08/nature-kavithai.html#more
தனிமரம்
அவசர உலகில் அறுசுவையுடன் காத்திருக்கிறேன். பழகலாம் இதமாக என்கின்றார்...இந்தச் சுட்டியைப் பாருங்களேன்!
இராம.கி
வளவு வலைத்தளத்தின் பெயர்
திண்ணையில் வெளிவந்த அகவற்பா. 'இன்னும் கொஞ்சமாய் என்மனக் கசகில் ' சுட்டி இதோ.
முனைவர் மு.பழனியப்பன்
மானிடள் வலைத்தளத்தின் பெயர். தமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ என்று சொல்லும் இவரின் சாங்கியத் தாயும், சாங்கிய மதமும் அழகிய ஒரு பதிவு! வாசிக்க சுட்டி இதோ!
இலக்குவனார் திருவள்ளுவன்
எழுதுவோம் தமிழில்!
எண்ணுவோம் தமிழில்; எழுதுவோம் தமிழில் என்று அருமையான தொடர் இந்தச் சுட்டியைச் சொடுக்கிப் பாருங்களேன்!
ஆதிரா முல்லை
ஆதிரா பக்கங்கள் வலைத்தளத்தின் பெயர்
இவரது கவிதைகளுக்கு ஒரு சின்ன உதாரணச் சுட்டி. முரட்டுப் பிரியம் எனும் கவிதை
கவியருவி ம ரமேஷ்
கவியருவி ரமேஷ் கவிதைகள் வலைத்தளத்தின் பெயர். இவரும் ஹைக்கூ, சென்ரியு, லிமெருக்கூ கவிதைகளில் விளையாடுகின்றார்! உதாரணச் சுட்டி
http://www.kaviaruviramesh.com/2014/08/blog-post_26.html
பிழை இருப்பின் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும் தயக்கம் வேண்டாம்.
பிழை இருப்பின் மன்னிக்கவும். சுட்டிக் காட்டவும் தயக்கம் வேண்டாம்.
தில்லைஅகத்தின் தமிழ்ச்சோலை, ஏக்கர் கணக்கில், இல்லை இல்லை வலைத்தளக் கணக்கில் விரிவாகியுள்ளது!! இன்னும் நிறையச் சுற்றிப் பார்க்கவும், மனதில் கொள்ளவும் உள்ளன! ஆனால், தற்போது காலஅவகாசமும், இளைப்பாற வேண்டிய அவசியமும் உள்ளதால்........ஸ்பாடா! என்ன அன்பர்களே எங்களுடன் தமிழ் சோலையில் பயணித்தீர்கள் தானே! சற்று இளைப்பாருவோம்! நீங்களும் இளைப்பாருங்கள்! நாளை புத்துணர்வுடன் சந்திப்போம்!
இந்த நாள் உங்கள் எல்லோருக்கும் இனிய நாளாக அமைந்திட தில்லைஅகத்தின் வாழ்த்துக்கள்
மிகச் சிறந்த படைப்பாளிகளுடன்
ReplyDeleteஎன்னையும் இணைத்து அறிமுகப் படுத்தியது
மிக்க மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி
நான் தொடர் பய்ணத்தில் இருப்பதால்
மற்ற பதிவுகளையும் படிக்க முடியாத நிலையில்
உள்ளதால் உடன் பின்னூடமிட முடியவில்லை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
குயில்களுடன் இந்த காகத்திற்கும் ஒரு அறிமுகமா! ஆஹா!! சற்றே வேலைபளு, சொந்த வேலைகள் காரணமாக எனது காலம் தாழ்த்திய நன்றி நண்பரே! நல்வாழ்த்துகள்! அன்புடன் ரவிஜி!!!
ReplyDeleteநண்பர்களையும், தமிழ் அன்பர்களையும் அறிமுகம் செய்ததற்கு நன்றி நண்பரே ! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<
ReplyDelete