Friday, 26 September 2014

தில்லைஅகத்துக் க்ரோனிக்கள்ஸின் இனிய, அன்பான வணக்கங்கள்!

எங்கள் அன்பான வலைப்பதிவ நண்பர்கள், தோழிகள், சகோதர, சகோதரிகள், பதிவர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்து க்ரோனிக்கள்ஸின் காலை வணக்கம்!

எங்களை இந்த வாரம் வலைச்சரத்தின் ஆசிரியப் பொறுப்பேற்பதற்கு அன்பு அழைப்பு விடுத்த திரு. அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும், திரு. பிரகாஷ்தமிழ்வாசி அவர்களுக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், மனமார்ந்த நன்றிகளும்! நாங்கள் எதிர்பாராத அழைப்பு! மிக்க மகிழ்ச்சி! என்றாலும் முதல் ஆசிரியர் பொறுப்பு என்பதால் சிறிது பொறுப்புடன் கூடிய நடுக்கம்!

நாங்கள் எழுதுவதைப் பற்றிப் பேசிக், கருத்துப் பரிமாறி, ஒருவருக்கொருவர் திருத்தம் செய்து எழுதுவதாலும், குறைவான கால அவகாசத்தாலும், தற்போதைய ஒரு சிறிய இக்கட்டானச் சூழலாலும், இந்தப் பொறுப்பை நாங்கள் செவ்வனே நிறைவேற்ற முடியுமா என்ற ஒரு சிறு குழப்பம். இதுவரை ஆசிரியர்களாக இருந்தவர்கள் எல்லோரும் தமிழ் அறிஞர்கள்! அவர்கள் எழுதிய விதம் எங்களைப் பிரமிக்க வைத்ததால், நாங்களும், அவர்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்த ஆசிரியர் பொறுப்பிற்கும் வலைச்சரத்திற்கும் எந்தக் குறையும் ஏற்படாமல், சிறிதேனும் நல்ல விதமாக எழுத வேண்டுமே என்ற எண்ணம்தான்.  இதோ, பொறுப்பை ஏற்றுக் கொண்டாகி விட்டது.  செவ்வனே செய்வோம் என்ற நம்பிக்கையில்.

எங்கள் வலைத்தளம்  http://thillaiakathuchronicles.blogspot.com  (தில்லைஅகத்து - இது ஆங்கிலத்தில் இருப்பதால் பலருக்கும் சிறிது குழப்பம் ஏற்படுவதால் இந்த விளக்கம்)

நாங்கள் இருவர்.  நண்பர்கள் சேர்ந்து எழுதுகின்றோம்.

துளசிதரன் தில்லைஅகத்து :  ஆங்கில ஆசிரியர், CFD Vocational Higher Secondary Schoolபாலக்காடு

கீதா  : சென்னை

எங்களைப் பற்றிப் பெரிதாகச் சொல்வதற்கில்லை. சொல்வதென்றால், எங்கள் வலைப்பூவில் சொல்லியதுதான், எங்கள் நட்பு 29 வருடங்களுக்கு முன்பு நாகர்கோவில்S.T. இந்துக் கல்லூரியில், கதை, இலக்கியம், நாடகம், வானொலி படைப்புகள் போன்றவற்றால் வளர்ந்து, பின் காலச்சக்கரத்தின் சுழற்சியில் பட்டு எங்கோ மறைந்தாலும், கடந்த வருடம் துளசிதரனின் thillaiakathu” (தில்லைஅகத்து) எனும் வலைத்தளத்தையும், துளசி ஆங்கிலத்தில் எழுதியிருந்த “மஹாமுடி த க்ரேட்” எனும் புத்தகத்தையும், யூட்யூபில் இருந்த துளசியின் குறும்படங்களையும் கண்ட கீதா, துளசியைத் தொடர்பு கொள்ள, நட்பு மீண்டும் அன்றலர்ந்த மலர் போல மலர்ந்தது! கீதா, துளசியின் புத்தகமான “HOW TO ANALYSE A VISUALIZED DRAMA AND ACHIEVE ENGLISH PROFICIENCY”க்கு விமர்சனம் எழுத, (இது துளசியின் கூகுள் + ல் உள்ளது) எங்கள் உள்ளிருக்கும் தமிழ் பற்றாலும், எழுத்தார்வத்தாலும் கடந்த வருடம்http://thillaiakathuchronicles.blogspot.com   எனும் வலைத்தளத்தை ஆரம்பித்தோம்.

ஆம்! 1711 ல் இங்கிலாந்தில், ஜோசஃப் ஆடிசனும், (JOSEPH ADDISON) சர் ரிச்சார்ட்ஸ்டீலும் (SIR RICHARD STEELE)  சேர்ந்து “ஸ்பெக்டேடர்” (SPECTATOR) எனும் தினசரி இதழ் ஆரம்பித்து எழுதியது போல்! இந்த அகத்தில், நாங்கள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவைபாதித்தவைவலி தந்தவைமகிழ்வு தந்தவைஆச்சரியப்பட வைத்தவை,அதிசயப் பட வைத்தவைஅமைதி தந்தவைபற்றிய எங்கள் அனுபவங்களைக் கதைகளாகவும், கட்டுரைகளாகவும் எங்கள் சிற்றறிவிற்கு எட்டிய வரை எழுதி வருகின்றோம். இந்த வலைத்தளம் ஆரம்பித்து ஒரு வருடம் மாதங்களே ஆன நிலையில் எண்ணற்ற நட்புகளை எங்களுக்கு வழங்கியுள்ளது! தற்போது இரு வலைத்தளங்கள் எங்கள் இருவரின் கீழ்! எங்களைப் பற்றிச் சொல்லிக் கொள்ள வேறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, எங்களைப் பற்றிச் சொல்வதை விட நாங்கள் கண்ட வலைத்தளங்களை இங்கு சொல்லலாமே!  எல்லோரது வலைத்தளங்களும் இனிய தமிழும், உயர்ந்தக் கருத்துக்களும் உள்ளடக்கிய தேனருவியே!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பது போல் இவ்வுலகமே கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.  ஆம்! “அன்பே சிவம்” (LOVE IS GOD) என்ற அடிப்படைத் தத்துவத்தில் தான் இந்த உலகம் இயங்குகின்றது.  அன்பாகிய சிவம் ஒவ்வொருவருடைய இதயத்து உள்ளிலும் உள்ளது. இறைவனை அடைய நம் உள் கடக்க வேண்டும் என்றக் கருத்தை மையமாகக் கொண்டு நாங்கள் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ. வாசித்துப் பாருங்களேன்!


இறையுணர்வு அதிகம் உண்டு. ஆயின், எங்களுக்கு மூடநம்பிக்கைகள் இல்லை.  எனவே, அந்த இறைவனின் பொற்பாதம் வணங்கி எங்கள் பொறுப்பு இனிதாக, நன்றாக அமைய, அன்பர்கள் உங்கள் எல்லோரது வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டி, இந்த வார ஆசிரியர் பொறுப்பைத் தொடங்குகின்றோம்!

சமயமும், இலக்கியங்களும் இரண்டறக் கலந்தவை! எனவே, ஆன்மீகம், இறைவன், கோயில்கள் பற்றி உன்னதமாக எழுதும் வலைப் பதிவர்களின் அறிமுகத்துடன் எங்கள் ஆசிரியப் பொறுப்பு தொடங்குகின்றது! 

இவர்கள் ஆன்மீகப் பதிவர்கள் என்று மட்டும் கொள்ள முடியாது.  எல்லோரது வலைத்தளங்களும் தமிழில் கொஞ்சி விளையாடுகின்றன. தமிழ் பாடத் திட்டத்தில், நாம் கம்ப ராமாயணமும், ஆழ்வார் பாசுரங்களும், பெரியபுராணமும், குற்றாலக் குறவஞ்சியும், சீறா புராணமும், வீரமாமுனிவரின் திருக்காவல் ஊர்க் கலம்பகமும், தேம்பாவணியும் படிக்கவில்லையா? அது போன்று, நம்பிக்கை இலாதாரும் கூட, இந்தத் தமிழ் சுவைக்காக இவற்றை வாசித்து இன்புறலாம் என்ற நல்ல எண்ணம்தான்!  ஆன்மீகப் பதிவர்கள் ஒரு சிலரை அறிந்தாலும் கூகுளில் தேடிய போது எத்தனை வலைத்தளங்கள்! அருமையான பதிவுகள்! நிறைய தகவல்கள்! எல்லா வலைத்தளங்களிலும் எல்லாவற்றையும் வாசிக்க முடியவில்லை, தற்போது கால அவகாசக் குறைவினால்!  எனவே அவற்றை எங்கள் சிற்றறிவிற்கு எட்டியவரை இங்கு கொடுத்துள்ளோம்! இனியேனும் அந்த வலைத்தளங்களை நாங்களும் வாசிக்க வேண்டும்! 

இராஜராஜேஸ்வரி

மணிராஜ் என்பது வலைத்தளத்தின் பெயர்

ஒவ்வொரு கோயிலைப் பற்றியும்பண்டிகைகள் பற்றியும்திருவிழாக்கள் பற்றியும்,பல அரிய தகவல்களை அள்ளித் தெளிப்பவர் இந்தச் சகோதரி.  ஆன்மீக வலை உலகில் மிகவும் பிரபலமானவர்.  நாங்கள் இருவருமே நாகர்கோவில் பந்தம் உடையவர்கள் என்பதால், சுசீந்திரம் தாணுமாலயன் பற்றிய அவரது பதிவிற்கானச் சுட்டியை இங்கு கொடுத்துள்ளோம்.  இது ஒரு பானைச் சோற்றிற்கு ஒரு சோறு பதமே!

---------------------------------------------------------------------------------------------------------------------
துரை செல்வராஜு

தஞ்சையம்பதி என்பது இவரது வலைத்தளத்தின் பெயர்

நாம் எல்லோருமே திருவிளையாடல் திரைப்படத்தைப் பார்த்திருப்போம்.  ஆயின் அந்தத் திருவிளையாடலைமனதிற்கினியசுவையான தமிழில்பாடல்களுடனும்,கதைகளுடனும்திருவிளையாடல் காணீரோ என்று அந்த ஆலவாயனின் விளையாடலை எழுதியிருப்பதை இந்தச் சுட்டியில் வாசித்துக் களியுங்களேன்!

------------------------------------------------------------------------------------------------------------------
கீதா சாம்பசிவம்

எண்ணங்கள் வலைத்தளத்தின்  பெயர்.



 எல்லாரையும் வம்பிழுப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! என்று இவர் சொல்லியிருந்தாலும் அப்படித் தெரியவில்லை!! மிக அழகான நடை. நாம் இறக்கும் போது நாம் சம்பாதிக்கும் பணம் வரப் போவதில்லை! மறு உலகம் செல்வதற்கு அந்த இறைவனின் நாமம் மட்டுமே விசா! பாஸ்போர்ட்! என்று சொல்பவர்! மிகச் சரியான வார்த்தைகள், ரசிக்க வைத்தன!

      ஆன்மீகப் பயணம் பற்றி இந்தத் தளத்தில் எழுதுகின்றார். நீங்களும் அவருடன் சென்று வாருங்களேன்!  நாங்கல் சென்று வந்ததால் இந்தப் பரிந்துரைச் சுட்டி!

-------------------------------------------------------------------------------------------------------------------------------
கண்ணபிரான், ரவிஷங்கர் (KRS)

“ஆன்மீகத்தில் பல நிலைகள் உள்ளன. அதிகம் பேசாதுகேள்விகள் ஏதும் கேட்காதுதனக்குள் இறைவனைத் தேடி அறிவது என்பது ஒன்று!  அடியார்களுடன் அடியார்களாகக்கூட்டு முயற்சியில் இறைவனின் குணானுபவங்களைப் பேசுவதும்,பாடுவதும்கேள்வி கேட்பதும்விடை தேடுவதும் ஒன்று!” 

அழகான விளக்கம்!

சமயம் சார்ந்தது அல்ல! தமிழ் சார்ந்தது!! என்று சொல்பவர் அதை நிலை நிறுத்தும் வண்ணம் வியக்கும் விதத்தில் – பார்ப்பதற்கு மிகச் சிறியவர் போல இருக்கின்றார்.  ஆனால் எழுத்தோ முதிய அனுபவம் உள்ளது போன்ற ஆழ்ந்த கருத்துக்களுடன் - பேச்சுவழக்கிலும், நல்ல இலக்கியத் தரத்திலும் ஆன்மீகம் பேசுகின்றார்!  தொல்காப்பிய உதாரணங்களுடன்! சுட்டி இதோ


நாங்கள் எங்கள் இடுகையில் சொல்லியிருந்தது போலவேஇவர் அவரது நடையில்,

“Taare Zameen Par பாத்தீங்கன்னா இப்படிப் பண்ண மாட்டீங்க! பெரியவர்களின் இந்தத் திணித்தல் approach தான் இன்றைய தலைமுறையை நம் பண்பாட்டுப் பொக்கிஷங்களில் இருந்து தள்ளி வைக்கிறது!

 என்று இவர் சொல்லுவது எவ்வளவு உண்மை என்பதும், எங்களைக் கவர்ந்தது.  சமீப காலத்தில் இவரது இடுகைகள் இல்லை.  ஏனோ?
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------      -------      கபீரன்பன்

கபீரின் கனி மொழிகள் என்ற பெயரில் வலைத்தளம்

கபீர்தாஸின் தோஹா எனப்படும் ஈரடிகளின் தமிழாக்க முயற்சியாகத் தனது ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவரது வலைத்தளம்.  நாங்கள் எங்கள் இடுகையில் சொன்னதை இன்னும் சுவைபட அழகாகத் திருமூலரின் பாடல்களோடு சொல்லுகிறார்

ஒவ்வொரு உள்ளத்துள்ளும் உறைபவன் இறைவன் என்பதை பெரியவர்கள் சொல்லித் தெரிந்து கொண்டுள்ளோம். அதை மனப்பூர்வமாக உணர்ந்து விட்டிருந்தால் நமக்குள்ள  இன்றைய பலப் பிரச்சனைகள் தலையெடுக்காமலே போயிருக்கும்.” என்று மிக ஆழமானத்  தத்துவத்தைச் சொல்லுகின்றார் கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே என்ற இடுகையில்.  அதன் சுட்டி

-----------------------------------------------------------------------------------------------------------------------
பாலா

சித்தர்களின் முழக்கம்...வலைத்தளத்தின் பெயர்

“ஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்...என்று தன்னைச் சொல்லி எழுதும் இவர், சித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் என்றும், அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாகக் கூறப்படுகிறது”. என்று சொல்லி, இலக்கியமும் இறையுணர்வையும் கலந்து கட்டி அடிக்கின்றார்.  அதற்கு ஒரு சிறு உதாரணச் சுட்டி

நெஞ்சறி விளக்கம் - இறைவன் உறையும் இடம்
---------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா வெங்கட்ராமன் 

வலைத்தளத்தின் பெயர் என் வாசகம்

யாரிந்த நடராஜன் என்ற அருமையான இடுகையின் சுட்டி

இவர் எழுதும் இடுகைகளில் ஆன்மீகமும், இலக்கியமும் இணைந்து, பெரும்பாலும் கர்நாடக இசைப் பாடலுடனும் பதிவிடப்படுவது இயலும் இசையுமாக ஒரு ஆன்மீகப் பயண இன்பத்தைத் தருகின்றது.  வள்ளலார் பற்றிய இந்தச் சுட்டியைப் பாருங்கள் உங்களுக்குப் புரியும்.

-----------------------------------------------------------------------------------------------------------------------
kaumarap payanam

“இது முற்றிலும் மாறுபட்ட ஆன்மீக பயணம்!”
ஆம்! உண்மையே! சென்று பாருங்கள்!


ஆன்மீகம் என்றால் என்னஎன்பதன் இவரது விளக்கம் பாருங்கள் இந்தச் சுட்டியில்.  இவரும் சித்தரின் ஜீவ நாடி ரகசியம் என்று பிரமாதப் படுத்துகின்றார்.  சுட்டி இதோ,


ஆனந்தத் தாண்டவம் பற்றி இங்கே சொல்லியுள்ளார் பாருங்கள்!
---------------------------------------------------------------------------------------------------------------------
ஞானவெட்டியான்

ஆலயங்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்


பல ஊர்கள் வாரியாக கோயில்கள் பற்றிச் சொல்லி இருக்கின்றார்.  நட்சத்திர ஆலயங்கள் என்ற ஒரு பதிவு. ஆனால், அதன் சுட்டி எங்களுக்குச் சரியாகக் கிடைக்கவில்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வாசுதேவன் திருமூர்த்தி

கடவுள் பற்றிய அவரது கருத்துக்களைச் சொல்லும் இந்த இடுகையை வாசித்துப் பாருங்களேன்!
அடுத்த தலைமுறையினருக்காகவும் அவரது ஆன்மீக வலைப்பூhttp://aanmikamforyouth.blogspot.in/
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முருகானந்தம் சுப்ரமணியன்


கோயில்கள், கடவுளர்கள், திருவிழாக்கள் பற்றி மட்டுமல்ல இவரது வலைத்தளம், கைலாய யாத்திரை செல்வது பற்றியும் அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.
------------------------------------------------------------------------------------------------------------------------------
The grand Velu janaka.

சித்தர் உலகம்  - சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட வலைத்தளம்

இன்னும் பல வலைத்தளங்கள் உள்ளன. இங்கு நாங்கள் ஒரு சிலவற்றையே குறிப்பிட்டுள்ளோம். பதிவு பெரிதாகி விடுமோ என்ற காரணத்தினால். பிறிதொரு சமயமும் வாய்ப்பும் கிடைத்தால் பகிர்கின்றோம்.

இன்று திங்கள். “திங்க்” “அள்” இறைவனை “திங்க்” செய்து “அள்”ளுங்கள் அவனது அருளை!

எல்லா அன்பர்களுக்கும் இந்த நாள் இனிய நாளாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.  மீண்டும் நாளை சந்திப்போம்.

வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் 2 ஆம் நாள் - செவ்வாய் - சமூக விழிப்புணர்வு(கள்

உலகின் எல்லையற்ற சக்தி உங்களுக்கே சொந்தமானது. உங்கள் மனத்தை மறைத்துக் கொண்டிருக்கும் மூட நம்பிக்கைகளை விரட்டி அடியுங்கள். நாம் துணிவுடன் இருப்போம். நமது மனத்தை பலவீனமாக்கிமூடநம்பிக்கையில் ஆழ்த்தி,மந்தமானவர்களாக்கிசாத்தியமில்லாதவற்றை ஆசையுறச் செய்பவர்களாகவும் அற்புதச் செயல்களை நம்புவர்களாகவும் நம்மை ஆக்குகின்ற எந்த நெறியையும் நான் விரும்பவில்லை. அவற்றின் பலன் அபாயகரமானது. அத்தகைய நெறிகள் ஒருபோதும் நன்மை செய்வதில்லை. அவை மனத்தை மந்த நிலையில் ஆழ்த்தி காலப்போக்கில் உண்மையை உணரஉண்மைவழியில் வாழ முடியாத அளவுக்கு மனத்தைப் பலவீனப்படுத்தி விடுகின்றன.

சுவாமி விவேகானந்தர்

அன்பர்கள் எல்லோருக்கும் தில்லைஅகத்தின்  காலை வணக்கம்! வலைச்சரத்தில் தில்லைஅகத்தின் இரண்டாம் நாள்! என்ன அன்பர்களே எல்லோரும் நலம்தானே! விவேகானந்தரின் மேற்கோளைக் கண்டதும் உங்களுக்குப் புரிந்திருக்கும் இன்றைய தலைப்பு!

இன்று செவ்வாய்! செவ்வாய் என்றவுடன், திருமணத்திற்குத் தடையாக இருக்கும் முக்கிய தோஷம், செவ்வாய் தோஷம் என்று கருதப்படுவதுதான் நினைவுக்கு வருகின்றது!  திருமணத்திற்கு, ஒத்த இரு மனங்கள் தானே வேண்டும்?! இப்போது செவ்வாய் கோளிற்கே சென்று குடியேறலாமா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து வரும் வேளையில், நம்மூர் ரியல் எஸ்டேட் போல், அமெரிக்காவில், தனியார்கள் “செவ்வாய்க்கு ராக்கெட் விடுகின்றோம் அங்கு செட்டிலாக விரும்புவோர் வாருங்கள்” என்று பயணச் சீட்டு பதிவு செய்ய விளம்பரம் கொடுக்கும் வேளையில், இங்கு செவ்வாய்தோஷத்தைப் பற்றிய பேச்சு! திருமணத்திற்கு மனம் ஒத்திருந்தால் பேசாமல் செவ்வாய் கோளுக்கு ஒரு பயணச் சீட்டு பதிவு செய்து குடியேற்றி விடலாமோ?! தோஷம் நீங்கி விடும்! போகிற போக்கைப் பார்த்தால், நாம் இங்கு பூமியின் சுற்றுப் புறச்சூழலை மாசு படுத்தியது போதாது என்று அங்கும் சென்று “செவ்வாய் தோஷமா?  “செவ்வாய்க்கே நாங்க தோஷம் கொடுத்துருவோம்ல” என்று புகுந்து பூமியாக மாற்றி விடுவோம் போல! பூமியில் இனி கட்டிடங்கள் கட்ட இடமில்லையாம்!

சமூக விழிப்புணர்வு என்பது உலகில் உள்ள எல்லோருக்கும் வேண்டும் என்றாலும், இந்தியராகிய நம் ஒவ்வொருவருக்கும் கட்டாயமாக விழிப்புணர்வு இருக்க வேண்டும். பொருளாதார அடிப்படையிலும், விஞ்ஞான அடிப்படையிலும் வளர்ந்த மேலை நாடுகளிலும் மூட நம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன எனும் போது, பல மொழிகள், சாதிகள், மதங்கள், கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் என்று கலந்த ஒரு சமூக அமைப்பு உடைய நம் நாட்டில் சமயம், மதங்கள் சார்ந்த மூட நம்பிக்கைகளும், அறியாமையினாலும், சமூக அக்கறையின்மையினாலும், விழிப்புணர்வு இல்லாமையினாலும் ஏற்படும் மூட நம்பிக்கைள் பெருகித்தான் கிடக்கின்றன!

சமூக விழிப்புணர்வு என்பது மூடநம்பிக்கைகள் சார்ந்தது மட்டுமின்றி, சமுதாய சீர்கேடுகளைக் குறித்துப் பேசி அதை அறிவு பூர்வமாக உணர்ந்து, உள்வாங்கி மாற்றம் எற்படுத்த முனைதலும் தான்! தீண்டாமை, மரங்களையும், காடுகளையும் அழித்து பூமியை பாலைவனமாக்கி சுற்றுப் புறத்தை மாசுபடுத்துதல், நீக்கமற நிறைந்திருக்கும் லஞ்சம், மருத்துவத் துறையிலும், கல்வித்துறையிலும், வியாபாரத் துறையிலும் நடக்கும் தில்லு முல்லுகள், கலப்படங்கள், போலிகள், பலாத்காரங்கள், நம்முடன் வாழும் சக மனிதர்களை இழிவு படுத்துதல் என்று, இன்னும் சொல்லவொணா பல சமுதாயச் சீர்கேடுகள் நம் சமூகத்தில் புரையோடிக் கிடக்கின்றன. இதற்காகத்தான், இவற்றில் ஏதேனும் மாற்றம் வராதா, மக்கள் விழிப்புணர்வு பெற மாட்டார்களா என்ற நப்பாசையில், இவற்றையெல்லாம் வலியுறுத்தி பலர் விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதி வருகின்றனர்.(மனிதர்கள் நாம் மேடைப் பேச்சுகளிலும், எழுதுவதிலும் கில்லாடிகள்தான். ஆனால், செயல்களில்?) நாம் சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் எழுதும் போது, அறிவியல் அடிப்படையில் சிந்திக்கச் சொல்லி, அறிவியல் என்ன சொல்லுகின்றது என்று எழுதுவது வழக்கம்! ஆனால், அந்த அறிவியல் சார்ந்த மூட நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன! நாங்களும்,  இது போன்று எழுதுபவர்களில் ஒருவராக எங்களால் இயன்ற வகையில், ஏதோ எழுதியுள்ள சுட்டிகள் இதோ....

மூடநம்பிக்கையால் இழிவு படும் மக்களைக் குறித்த ஒரு இடுகை.  அதன் சுட்டி

“பூமித்தாயின் கண்ணீர்” (பல வருடங்களுக்கு முன் கவிதையாக எழுதியது ஆனால் அந்தக் கவிதை தொலைந்து போனதால் கட்டுரையாக....இந்தச் சுட்டியில்

சரி! தில்லைஅகத்தின் சமூக விழிப்புணர்வு பற்றிய அறிமுகங்களைப் பார்ப்போமா! சமயம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகள் சில ஏற்றுக் கொள்ள கடினமாகக் கூட இருக்கலாம்! ஏனென்றால் நம்பிக்கை என்பது ஒருவரது தனிப்பட்ட உரிமை!  அது எல்லை மீறி சமூகத்தில் புற்று நோயாய் பரவும் போதுதான் விழித்துக் கொள்ள வேண்டியதாகிவிடுகின்றது! அன்னப் பறவை பாலையும் நீரையும் பிரிப்பது போல நாம் அதில் உள்ள நல்ல கருத்துக்களை மட்டும் உள்வாங்கிக் கொள்வோமே! விவாதங்களைத் தவிர்த்து!

நா முத்துநிலவன்

ஐயாவைப் பற்றி அறியாதவர் யாரும் இருக்க முடியாது!  நல்ல உயர்வானக் கருத்துக்களைச் சொல்லி வருபவர்!  அவரும், ஊமைக்கனவுகள் விஜு ஐயா அவர்களும், சகோதரி தேன்மதுரக்ரேஸ் அவர்களும் இடுகைகளில், பின்னூட்டங்களில் உரையாடுவதை நாங்கள் மிகவும் ரசிப்போம், அதில் தமிழ் விளையாடுவதால்!  கொஞ்சம் யோசிக்க, கேள்வி கேட்க வைக்கும் ஐயாவின் ஒரு இடுகை இதோ, இங்கு இந்தச் சுட்டியில் “ஆன்ம விளக்கங்களும் ஆபாசக் கதைகளும்”.

அ பாண்டியன்

அரும்புகள் மலரட்டும் வலைத்தளத்தின் பெயர்.  என் உள்ளத்து அரும்புகளை இங்கே மலர விடுகிறேன் மணம் பரப்பும் எனும் நம்பிக்கையில்” அவரது வாசகம்! உங்கள் அரும்புகள் மலர்ந்து மணம் வீசுகின்றன! என்றும் வீசும் நண்பரே!
மனித நேயம் மிக்க ஆசிரியர். பல விழிப்புணர்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கின்றார்.  போலி பூசாரிகளும் அதில் ஒரு உதாரணச் சுட்டி இதோ

டி என் முரளிதரன்

மூங்கில் காற்று இவரது வலைத்தளத்தின் பெயர்.  மிகவும் அருமையான வலைப்பதிவர்.  தற்போது இவரைக் காணவில்லை!  அவரது காணாமல் போனக் கிணறுகள் கட்டுரையை இந்தச் சுட்டியில் வாசித்துப் பாருங்களேன்! அருமையான பதிவர்.  சமீபகாலமாக அவரது வலைத்தளத்தில் காணவில்லை!  மீண்டும் வருவார் என்று நினைக்கின்றோம்!

உலகளந்த நம்பி

வலைத்தளம் - மூடர் உலகம்.  மூட நம்பிக்”கைகளை” அடித்து நொறுக்குபவர்! இவரது சில பதிவுகள் பலருக்கும் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால், அதில் உள்ள நல்ல கருத்தை மட்டும் எடுத்துக் கொள்ளலாமே என்ற நன் நோக்குடன்...இதோ இந்தச் சுட்டியைக் கிளிக்கிப் பாருங்களேன்...சுஜாதாவின் அறிவியல் விளக்கங்களுடன்
வருமுன் உரைத்தலும் அபூர்வம் நிகழ்த்தலும்’ [ஈ.எஸ்.பி] சாத்தியமாபோட்டு உடைக்கிறார் சுஜாதா!

கில்லர்ஜி
பூவைப் பறிக்க கோடரி எதற்கு என்ற கேள்வியுடன் இவரது வலைத்தளம்
வனமா? பணமா?  காட்டமான இந்த அருமையான கட்டுரையை வாசிக்கச் சுட்டி
இந்தச் சுட்டியை கிளிக்கிப் பாருங்களேன்!  ஒரு நல்ல, வித்தியாசமான மனித நேயப் பதிவு! .....மனிதர் செம ஸ்பீடு! அவர் எழுத்துக்களிலேயே அது தெரியும்!

நான்கு பெண்கள்

நான்கு பெண்கள். இந்தத் தளத்தில் திருமதி ரஞ்சனி அவர்கள் எழுதியிருக்கும் கட்டுரை இது.  இவர் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வுக் கட்டுரைகளும் தொடர் பதிவுகளாக எழுதிவருகின்றார்  அதன் சுட்டி இதோ


உறுப்பு தானம் பற்றிய அவரது அழகான விழிப்புணர்வுக் கட்டுரை


மதிஸ் ப்ளாக்
    
நாங்கள் வலையில் விழிப்புணர்வுக் கட்டுரைகளைப் பற்றித் தேடிக் கொண்டிருந்த போது, “மரங்களை வெட்டுங்கள்” என்ற தலைப்பைப் பார்த்த்தும் ஆச்சரியமாக இருந்தது!  மரங்களை நடுங்கள், வளருங்கள், காடுகளை வளருங்கள் என்று சொல்லிவரும் காலகட்டத்தில்...வாசித்த போதுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான கட்டுரை! வயலில் களைகளைப் பிடுங்கித்தானே ஆக வேண்டும் அது போன்று!  வாசித்துத்தான் பாருங்களேன்!


புவி

பூவுலகை பூப்போல் காத்திடுவோம்
பூமிப்பந்தையே பூஞ்சோலையாய் மாற்றிடுவோம்
நம் தாய் மடியை (பூமி)
சேதப்படுத்துவதை அடியோடு தவிர்த்திடுவோம்
என்ற அருமையான கருத்துடன், இந்த வலைத்தளம் முழுவதும் புவி காப்பது பற்றிய அருமையான விழிப்புணர்வுக் கட்டுரைகள்பல இன்றியமையாத தகவல்கள்! சுட்டி இதோ
     
கீதா  எம்

தென்றல் வலைத்தளத்தின் பெயர். 

பல விழிப்புணர்வுக் கருத்துக்களை கவிதைகள் வழியாகவே சொல்லி அடிக்கும் இவரது ஒரு உதாரணச் சுட்டி இங்கே!

நிகழ்காலத்தில் சிவா

நிகழ்காலத்தில் (அறிவே தெய்வம்) வலைத்தளத்தின் பெயர்.

அவர் எழுதியிருக்கும் விழிப்புணர்வு என்பது என்ன? என்பது பாமரனுக்கும் புரியும் வகையான அருமையான கட்டுரை அதன் சுட்டி இதோ!

யாழ்பாவாணன்

யாழ்பாவாணனின் எழுத்துக்கள் என்பது வலைத்தளத்தின் பெயர்

சமூக சீர்கேடுகளை புதுப்பாவினால் அடுக்குபவர்.  இதோ ஒரு சுட்டி.

ஆயிஷா ஃபரூக்

திருநங்கைகள் பற்றிய மிக அழகான ஒரு விழிப்புணர்வுத் தளம், பெண்களின் பாலியல் கொடுமைகளைப் பற்றியும் பேசுகின்றார் மிக அருமையாக, ஆண்களுக்கு அறிவுரை கிடையாதா என்றும் கேட்கின்றார்!!!


மணவை ஜேம்ஸ்

மனிதனுக்குள் மனிதம் என்ற அழகிய கவிதையின் சுட்டி இதோ

சுந்தர் ராஜன்

மூட நம்பிக்கையை ஒழிப்போம் என்று அவர் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்களேன்!
  
சமூக விழிப்புணர்வு பக்கங்கள்

இதில் பலர் பங்களிக்கின்றார்கள்
சமூக நலம் காப்போம், கல்வியைக் கற்போம்-கற்பிப்போம், சுகாதாரத்தைப் பேணுவோம் என்று பலர் சேர்ந்து இந்த வலைத்தளத்தில் எழுதி வருகின்றார்கள்.  விழிப்புணர்வுக் கட்டுரைகள் கொட்டிக் கிடக்கின்றன.  ஒரு சில சுட்டிகள் இங்கே..
லஞ்ச ஒழிப்பு பற்றிய சுட்டி  அதிரை மெய்சா

போலி உற்பத்தி பற்றிய தொடர் பதிவின் சுட்டி. நபிதாஸ் (மனிதர்களிலேயே போலிகள் இருக்க பொருள் உற்பத்தியில் இல்லாமலா போய்விடும்? என்று நீங்கள் கேட்பது புரிகின்றது!)

(கொஞ்ச வருஷம் முன்னாடி பச்சைக் கலர் ஜிங்குச்சா நு பச்சைக் கலர் புடவை வாங்கிக் கொடுத்தால் அமோகம் அப்படின்னு வதந்தி பரவி சுத்திச்சுல!)
வதந்தியைப் பரப்பாதீர் என்ற ஒரு வித்தியாசமான விழிப்புணர்வுக் கட்டுரை.  சுட்டி இதோ.  வாசித்துத்தான் பாருங்களேன்! அதிரை மெய்சா 

புதுகைசீலன்

“இவ்வுலகில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது! அன்றும்! இன்றும்! என்றும்!” மிக மிக உண்மையே. எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கட்டுரைகள் வந்தாலும் எந்த மாற்றமும் நிகழவில்லையே! இவரது, எரிபொருள் பற்றிய கருத்து மிக்க கட்டுரையைப் படிக்க இதோ சுட்டி

தமிழ்வாசிபிரகாஷ்

தமிழ் வாசி வலைத்தளத்தின் பெயர்.  தமிழை நேசிப்பவர்களுக்கு வாசிப்பதற்கு!  ஆஹா

வீட்டிற்கு வெளியே சிக்கன் சாப்பிடறவங்க கொஞ்சம் ஜாக்கிரதையா சாப்பிடுங்கப்பா...இங்க பாருங்க கலப்படத்தை  சிக்கன்ல எலிக்கறியாம்பா.  இந்தச் சுட்டில போய் பாருங்கப்பா...

தமிழ்வினை

பாலியல் வன்முறையைத் தவிர்க்க ஐந்து யோசனைகள் மிகவும் விழிப்புணர்வைத் தூண்டும், சமூகத்திற்கு மிகவும் அவசியமான இந்தக் கட்டுரை ஆங்கிலத்தில் வந்ததைத் தமிழ்வினையில் தமிழில் மொழி பெயர்த்து பகிர்ந்துள்ளவர் தமிழானவன் அவர்கள். சுட்டி இதோ


சேவியர்

சாலை : பயணிக்கவா மரணிக்கவா ?  வாசிக்க வேண்டிய கட்டுரை. இங்கே கிளிக்குங்கள்

மழலைப்பிரியன்

குழந்தைகளுக்கான பக்கம் என்றாலும் நாமும் தெரிந்து கொள்ளலாம். குழந்தைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும் சாலை பாதுகாப்பு குறித்த மிகவும் நேர்த்தியான கட்டுரை. இந்தச் சுட்டியில்

Vathees Varunan

வதீஸ் in கிறுக்கல்கள் வலைத்தலத்தின் பெயர். 

மூடநம்பிக்கைகளைப் பற்றிய ஒரு கட்டுரையின் சுட்டி.

கீற்று

எழுத்தாளர்: தியடோர் பாஸ்கரன்
தாய்ப் பிரிவு: அறிவியல் ஆயிரம்
பிரிவு: சுற்றுச்சூழல்
சுட்டி இதோ

வாசகர் கூடம்

என்னடா சமூக விழிப்புணர்வு அறிமுகப் பகுதியில் வாசகர் கூடம் எப்படி வந்தது என்று எண்ண வேண்டாம்!  அதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்  வன உயிரியலாளரும், திரைப்பட ஆராய்ச்சியாளருமான திரு. தியோடார் பாஸ்கரன் எழுதிய இன்னும் பிறக்காத தலைமுறைக்கு என்ற விழிப்புணர்வுப் புத்தகத்திற்காகத்தான்! அதன் சுட்டி இதோ

பிழை இருப்பின் மன்னிக்க!  சுட்டிக்காட்டவும் தயங்க வேண்டாம்!

எல்லா வலை அன்பர்களுக்கும் இந்த நாள் ஒரு இனிய நாளாக அமைந்திட எங்கள் நல் வாழ்த்துக்கள்! நாளை மீண்டும் சந்திப்போம்!